சர்ச்சையான பதிவு நீக்கவேண்டும் -விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக சைபர் கிரைமில் புகார்
விஜய் சேதுபதி பல நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் யதார்த்தமாக பேசியதை சிலர் எடிட் செய்து அவற்றை மக்களிடம் தவறாக காட்டி வருகிறார்கள் என்று விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளது கோயிலைப் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது சாமி குளிக்கும்பொழுது திறக்கப்பட்டிருக்கும் ஆடை மாற்றும் பொழுத கதவு பூட்டப்பட்டிருந்தது அதாவது திரை போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பற்றி கூறியுள்ளார். இதுபோன்று கருத்தை கூறி உள்ளார் அவற்றை தற்போது மிகவும் memes செய்து சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதி அவர்களின் மீது இந்து அமைப்பின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதற்கு பதிலாக விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக கிரைம் போலீசில் புகார் செய்ய பட்டுள்ளன அந்த புகாரில் வருடங்களுக்கு முன்பு யதார்த்தமாகப் பேசி அவற்றை எடிட் செய்து மக்கள் மத்தியில் காமெடியாகவும் தவறாக சித்தரிக்க படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன அதாவது கிரேசி மோகன் அவர்கள் பேசியது தான் விஜய்சேதுபதி அவர்கள் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர் இவை எதார்த்தமான பேச்சு அதற்காக விஜய் சேதுபதி மற்றும் அவற்றின் குடும்பங்களை அவதூராக பதிவிட்டு கொண்டு வருகிறார்கள் அந்த பதிவுகள் மற்றும் காணொளிகள் நீக்க வேண்டும் என்று சைபர் கிரைமில் புகார் அளிக்கப் பட்டுள்ளன தற்போது இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது